Monday, January 12, 2015


தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-16 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம் 
தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பிரான்ஸ் நாட்டு பிரெஞ்ச் கயானாவில் உள்ள கவுரு ராக்கெட் தளத்தில் இருந்து அதிகாலை 2.00 மணி 10 நிமிடங்களுக்கு ஏரியான் 5விஏ 221 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 12 ஆண்டுகள் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் 3,181 கிலோ எடை கொண்டது.

கைப்பேசி – ஆளுமை திட்டம் – குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். 
இந்தியாவில் முதன்முறையாக, கைப்பேசி – ஆளுமை திட்டத்தை பெங்களுருவில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி தொடங்கி வைத்தார். அரசு சேவைகளை கைப்பேசி மூலம் வழங்கும் இந்தச் சேவை, இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகிறது. இத்திட்டத்தின் மூலம் மின்சாரம், குடிநீர் கட்டணங்கள், போக்குவரத்து அபராதக் கட்டணங்கள் செலுத்தலாம். போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களையும் பெறலாம்.

யோகா தினம் 

பிரதமர் நரேந்திரமோடியின் ஆலோசனைப்படி சூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பைக் கிரிக்கெட் – 2015 : சச்சின் தூதராக நியமனம் 

உலகக் கோப்பைக் கிரிக்கெட் – 2015க்கான தூதராக சச்சின் டெண்டுல்கரை ஐ.சி.சி நியமனம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் போதும் சச்சின்தான் தூதராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குளிர்காலக் கூட்டத்தொடர் – 2014 

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் தொழிலாளர் நலன் மனித வளம், நிலக்கரித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் காப்பீடு, நிலக்கரி ஒதுக்கீடு சுரங்க மசோதா ஆகிய இரண்டு மட்டும் நிறைவேறவில்லை.

சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவல் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. சிறுகதை, சினிமா, மொழிப்பெயர்ப்பு என பல தளங்களில் இயங்கிவரும் படைப்பாளியான பூமணி 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து அந்நாவலை எழுதியுள்ளார்.

கணித வாரம் கொண்டாட மத்திய அரசு முடிவு 

கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் கணிதத் திறனை வளர்க்கும் வாரத்தை கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணியல் சார்ந்த புதுமை மற்றும் பயிற்சியில் தனித்திறனை வளர்த்தல் எனும் தலைப்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் 

ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் டிசம்பர் 23 அன்று வெளியானது.

ஜார்க்ண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பா.ஜ.க 37 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களையும் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 87 தொகுதிகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெருபான்மை கிடைக்கவில்லை. நடைபெற்ற நான்கு முனைப் போட்டிகளில் பா.ஜ.க. 25 இடங்களையும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும், மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றின. காஷ்மீர் மாநிலத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பாரத ரத்னா விருது : வாஜ்பாய், மாளவியா 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மதன்மோகன் மாளவியா சுதந்திரப் போராட்டதில் தீவிர பங்கு வகித்தவர். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 4 முறை பதவி விகத்தவர். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர். இந்தியாவில் சாரணர் இயக்கம் நிறுவியவர்களில் முக்கியமானவர்.

50 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய் 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் சாலைப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தை எட்டியுள்ளது. பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது.

மறைவுகள் 

அண்மையில் 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் காலமானர்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர். பில் ஹியூக்ஸ் பந்து தாக்கியதில் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.

தமிழ்த்திரையுலகின் இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்பட்ட கே.பாலச்சந்தர் 24-12-2014ல் காலமானார். இவர் 2011ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.

0 comments:

Post a Comment